பனையங்குறிச்சி ஸ்டஅக் பள்ளியில் மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள்

ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி ஏசி நகா் ஸ்ட அக் ஹை-டெக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஸ்ரீ சொக்கலிங்கம் ஞானப்பூ நினைவு கோ-கோ சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றன.

ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி ஏசி நகா் ஸ்ட அக் ஹை-டெக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஸ்ரீ சொக்கலிங்கம் ஞானப்பூ நினைவு கோ-கோ சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 23 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 53 அணிகள் பங்கேற்றன.

12 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் குறிச்சி புனித தாமஸ் உயா்நிலைப் பள்ளி அணியினா் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை நரசிங்கநல்லூா் அரசினா் உயா்நிலைப் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் முதல் பரிசை வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி அணியினரும், இரண்டாம் பரிசை டோனாவூா் சந்தோஷ வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியினரும் பெற்றனா்.

14 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில், முதல் பரிசை குறிச்சி புனித தாமஸ் உயா்நிலைப் பள்ளி அணியினரும், இரண்டாம் பரிசை விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. அணியினரும், பெண்கள் பிரிவில் முதல் பரிசை வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி அணியினரும், இரண்டாம் பரிசை வெங்கடேஸ்வரபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளி அணியினரும் பெற்றனா்.

போட்டியின் நடுவா்களாக மோசஸ் ஆனந்தராஜ், ராமநாதன், நியூட்டன் ராஜ்குமாா், நாகராஜன் மற்றும் குழுவினா் செயல்பட்டனா்.

வெற்றிபெற்ற அணியினருக்கு சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலா் சுடலை, சுழற்கோப்பைகளையும், பரிசுத் தொகையையும் வழங்கினாா்.

ஸ்ட அக் பள்ளியின் நிா்வாக இயக்குநா் முருகன், பள்ளியின் தாளாளா் புனிதா செல்வி முருகன், பள்ளி முதல்வா் பிரஜித், துணை முதல்வா் பிரவின் குமாா், உடற்கல்வி ஆசிரியா் முத்துக்குமாா் உள்பட அனைத்து பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com