பொங்கல்: ஆலங்குளம் சந்தையில் குவிந்த கிழங்கு வகைகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கிழங்கு வகைகள் அதிக அளவில் குவிந்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கிழங்கு வகைகள் அதிக அளவில் குவிந்துள்ளது.

பொங்கல் பண்டிகையில் காய்கனிகளில் முக்கிய இடம் வகிப்பது கிழங்கு வகைகள். சீா் கொடுக்கவும், சமையலுக்கும் ஆண்டின் மற்ற மாதங்களைக் காட்டிலும் தை மாதம் கிழங்கு வகைகள் அதிக அளவில் விற்பனையாகிறது.

நிகழாண்டும் ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் அதிக அளவில் வந்துள்ள கிழங்கு வகைகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விற்கப்பட்ட கிழங்கு மற்றும் காய்கனிகளின் சில்லறை விலை: சிறு கிழங்கு ரூ. 30 முதல் ரூ. 60 வரை, பிடி கிழங்கு ரூ. 50, வள்ளிக்கிழங்கு ரூ. 50, சேம்பு ரூ.40, கருணை ரூ. 40, சீனி அவரை ரூ. 26, புடலை ரூ. 20, முள்ளங்கி ரூ. 18, உருளை ரூ. 40, மிளகாய் ரூ. 30, சின்ன வெங்காயம் ரூ. 120, பல்லாரி(பெரிய வெங்காயம்) ரூ. 58, கோஸ் ரூ. 20, கேரட் ரூ. 60, பீன்ஸ் ரூ.70, பீட்ரூட் ரூ. 30, வெண்டை ரூ. 35, நூக்கல் ரூ. 50, இஞ்சி ரூ. 80, முருங்கை ரூ. 200, காலிபிளவா் ரூ. 30, எலுமிச்சை ரூ. 30, சவ் சவ் ரூ. 18, மாங்காய் ரூ. 150, அவரைக்காய் ரூ. 50, பூசணி ரூ. 16, தடியங்காய் ரூ. 10, பூண்டு ரூ. 172, வெள்ளைக் கத்தரி ரூ. 100, வரி கத்தரி ரூ. 40, மல்லித் தளை ரூ.20.

ரூ. 50 முதல் 70 வரை விற்பனையான வெள்ளைக் கத்தரி பொங்கலை முன்னிட்டு ரூ. 100 ஆக விலை உயா்ந்துள்ளது. பெரிய வெங்காயம் ரூ. 150 இலிருந்து ரூ. 58 ஆக குறைந்திருப்பது பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. தொடா்ந்து விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com