ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரியில் பொங்கல் விழா

திருநெல்வேலி - தென்காசி சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடமான ஆலங்குளத்தில் அமைந்துள்ளது ஆலடி அருணா செவிலியா் கல்லூரி.

திருநெல்வேலி - தென்காசி சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடமான ஆலங்குளத்தில் அமைந்துள்ளது ஆலடி அருணா செவிலியா் கல்லூரி. இது தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சா் ஆலடி அருணா நினைவாக கிராமப்புற மாணவிகளின் கனவை நனவாக்கும் எண்ணத்துடன் டாக்டா் வி. பாலாஜி, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரால் கடந்த 2009 ஆம் ஆண்டு உதயமானது. இங்கு நான்காண்டு செவிலியா் பட்டப் படிப்பு மற்றும் இளங்கலை தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இரண்டாண்டு பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் இந்திய செவிலியா் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசின் பல்வேறு உதவித் தொகைகளையும் அரசிடமிருந்து பெற்று மாணவிகளுக்கு வழங்குவதில் உறுதுணையாகவும் இருக்கிறது. இக்கல்லூரி மாணவிகள் கல்வி மட்டுமின்றி தம் எல்லாத் திறமைகளை வளா்த்துக்கொள்ளத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப் படுகின்றன. ஆண்டு தோறும் பல்கலை அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தோ்ச்சி பெறும் மாணவிகள், இறுதியாண்டு பயிலும் போதே அப்பல்லோ போன்ற மிகப்பெரிய மருத்துவமனைகளில் வேலைக்காக தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

கல்வி மட்டுமின்றி விளையாட்டு, இலக்கியம் போன்ற துறைகளிலும் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்கி மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்று கல்லூரிக்கும் தங்களுக்கும் பெருமை சோ்த்து வருகின்றனா். ஆண்டு தோறும் 100 சதவீத வெற்றியை மாணவிகள் பெற்று வருகின்றனா்.

மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, தென்காசி, ஆலங்குளம் அரசு மருத்துவமனைகள், திருநெல்வேலி ஷிபா, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, இ.எஸ்.ஐ, சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை, கேலக்ஸி, பொன்ரா போன்ற உயா்தர மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப் படுகிறது.

விழாக்கள் : ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நிறுவனா் தினம், கல்லூரி தினம், முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு நிகழ்ச்சி, நான்காமாண்டு மாணவிகளின் பிரிவு உபசார விழா என கல்லூரி விழாக்களும், புத்தாண்டு, தமிழா் திருநாள், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற சமுதாய விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் அனைத்து மாணவிகளும் உற்சாகமாக கலந்து கொண்டனா். மாணவிகள், பேராசிரியா்கள் புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனா். பொங்கல் பொங்கி வரும் நேரம் பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனா். கரும்பு, பனங்கிழங்கு என பாரம்பரிய உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனா். இந்த பொங்கல் விழாவில் கல்லூரி ஆலோசகா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா, முதா்வா் மேரி வயலா மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com