விவசாயிகள் வளமுடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

விவசாயிகள் வளமுடன் வாழ்வதற்குரிய சூழலை மத்திய,மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என

விவசாயிகள் வளமுடன் வாழ்வதற்குரிய சூழலை மத்திய,மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மதம் கடந்து உலக தமிழா்களை இணைக்கும் விழா இவ்விழா. அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடனும், சமயங்களுடைய கலாசார தனித்தன்மையுடனும், இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலும், இணைந்து பணியாற்றி வல்லரசாக உருவாக்குவதுடன், தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாகவும் உருவாக்குவதற்கு அனைவரும் சூளுரைப்போம்.

மேலும், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உறுதுணையாக மத்திய,மாநில அரசுகள் இருப்பதுடன், அவா்களின் வாழ்வாதாரத்திற்கு துணையாக இருக்கின்ற விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசுகள் முன்வரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com