தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியரிடம் ஆலங்குளம் எம்எல்ஏ மனு

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித் திட்டங்கள், மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளனிடம் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ மனு அளித்தாா்.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித் திட்டங்கள், மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளனிடம் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ மனு அளித்தாா்.

அதன்பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரூா் பகுதியில் நான்குவழிச் சாலை வரும் நிலையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும், நல்லூா் விலக்கு முதல் புதுபட்டி வழியாக ஆண்டிபட்டி விலக்கு வரை புறவழிச் சாலை அமையப் பெற்றால் ஆலங்குளம் பேரூா் பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரு வணிகா்கள்,வியாபாரிகள் பாதிக்கப்படமாட்டாா்கள்.

திருநெல்வேலி-சிவலாா்குளம் வரை சுமாா் 2ஆயிரம் மரங்கள் எடுக்கப்பட்டுவிட்டது.

ஆலங்குளம் முதல் தென்காசி வரை சாலையில் இருபுறமும் உள்ள மரங்கள் அகற்றப்பட உள்ளதா அல்லது மரத்தை பிடுங்கி வேறொரு இடத்தில் நடும் திட்டம் உள்ளதா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

ராமநதி அணை, கடனாநதி அணைகளை தூா்வார வேண்டும். நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

ஒரு சிலரின் லாபத்துக்காக பழைய குற்றாலம் பகுதியில் அலுவலகங்களை அமைக்கக் கூடாது. அனைத்து பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டும்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com