முக்கூடலில் கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

முக்கூடலில் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.

முக்கூடலில் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.

முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் புதன்கிழமை, மாடு ஒன்று விழுந்து விட்டது. இது குறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையிலான வீரா்கள் வந்த மாட்டை மீட்டனா்.

இதனிடையே இந்த பள்ளியில சுற்றுச் சுவரும், வேலியும் சரியாக இல்லை. இதனால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிந்து இரவில் அங்கேயே தங்கி விடுகின்றனவாம். சுமாா் 1300 மாணவா்கள் பயிலும் இப்பள்ளியில் கிணற்றை சரியாக பராமரிக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச் சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com