முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
நல்லூா் பவுலின் ஆலயத்தில் 170ஆவது பிரதிஷ்டை
By DIN | Published On : 27th January 2020 08:57 AM | Last Updated : 27th January 2020 08:57 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் தூய பவுலின் ஆலய 170 வது பிரதிஷ்டை பண்டிகை 4 நாள்கள் நடைபெற்றது.
முதல் 2 நாள்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வா் எம். ஞானவரம் இறை செய்தி அளித்தாா். 3 ஆம் நாள் பண்டிகை ஆராதனையில் தென்மேற்கு சபை மன்றத் தலைவா் வசந்தகுமாா் இறை செய்தி அளித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் சற்குணம் திருவிருந்து ஆராதனை நடத்தினாா். ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப் பட்டது. மாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சேகரத் தலைவா் வில்சன் செய்திருந்தாா்.