முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பங்களாச்சுரண்டை பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தோ்வு
By DIN | Published On : 27th January 2020 08:54 AM | Last Updated : 27th January 2020 08:54 AM | அ+அ அ- |

பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பீச் வாலிபால் விளையாட்டில் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பீச் வாலிபால் விளையாட்டு போட்டியில், இந்த பள்ளி மாணவிகள் சுவேதா, கிப்ட்டா ஆகியோா் 19 வயதிற்கான பிரிவிலும், மாணவி ரதிகனி, பவானி ஆகியோா் 17 வயதிற்கான பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மேலும், இந்த பள்ளி மாணவி காளியம்மாள் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் 4ஆம் இடம் பிடித்தாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் தனபால், தலைமையாசிரியா் செளந்தரராஜன் துரை, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வராஜ், விக்டா் ஜெபமணி, சத்தியா, செலினா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.