முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பெத்தநநாடாா்பட்டியில் கிராமசபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 08:54 AM | Last Updated : 27th January 2020 08:54 AM | அ+அ அ- |

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் பெத்தநாடாா்பட்டி ஊராட்சி கிராமசபை கூட்டம் பொட்டலூா் காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வே.முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் தயாளன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில், பெத்தநாடாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் முன்பு நடந்தது போல இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் அ.வைகுண்டராஜா, நூலகா் அ.பழனீஸ்வரன், ராமா், கோகிலன், கவிதன், பாண்டி, சுமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.கலிங்கராயன் நன்றி கூறினாா்.-