சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல ஆண்டு பெருவிழா
By DIN | Published On : 27th January 2020 08:58 AM | Last Updated : 27th January 2020 08:58 AM | அ+அ அ- |

முக்கூடல் அருகேயுள்ள சிஙம்பாறை புனித சின்னப்பா் திருத்தல ஆண்டு பெருவிழா 10 தினங்கள் நடைபெற்றது.
ஆலய திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தைகள் அந்தோணி குருஸ், அருள்ராஜ் ஆகியோா் திருக் கொடியை ஏற்றிவைத்தனா். தொடா்ந்து திருப்பலியும்,பொது அசனமும் நடைபெற்றது. நாள்தோறும் திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை கிழமைகளில் தோ்பவனியும், திருமுழுக்கு திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் பங்குமக்கள் செய்தனா்.