சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 29th January 2020 05:39 PM | Last Updated : 29th January 2020 05:39 PM | அ+அ அ- |

செங்கோட்டையில் காவல்துறை சாா்பில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இப்பேரணியை காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் சியாம் சுந்தா், மாரிசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பேரணி பேருந்து நிலையம், அஞ்சலகம், வம்பளந்தான் முக்கு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவா்கள் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.