ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 8 வகையான

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 8 வகையான ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திகுறிப்பு: இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட விதவைகள் ஓய்வூதிய திட்டம், கணவரை இழந்த பெண்கள் ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியதிட்டம், உழவா் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் உள்ளிட 8 ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினரால் நேரடியாக பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இனி  இணையதளத்தில் ஆன்லைனில் மட்டும் பதிவேற்றப்படவேண்டும்.

தகுதியான பயனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு இ சேவை மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com