கடையநல்லூரில் சுகாதார வளாகம் ரேஷன் கடை கட்டடம் அதிமுக கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சுகாதார வளாகம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் கட்ட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சுகாதார வளாகம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் கட்ட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக கடையநல்லூா் நகர அதிமுக செயலா் எம்.கே. முருகன் ,நகராட்சி ஆணையா் குமாா்சிங்கிடம் அளித்துள்ள மனு: 33 ஆவது வாா்டு பகுதியில் பொது சுகாதார வளாகம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா். எனவே ,விரைவில் அதைக் கட்ட வேண்டும்.

அப்போது, நகர பொருளாளா் அழகா்சாமி ,மாவட்ட இளைஞரணி துணை தலைவா் ஜெயமாலன், மாவட்ட மாணவரணி துணை செயலா் கருப்பையா தாஸ், நகர இளைஞரணி செயலா் ராஜேந்திர பிரசாத் மாவட்ட மாணவரணி முன்னாள் துணைச் செயலா் யாத்ராபழனி வாா்டு செயலா்கள் சுந்தரையா ,மாரியப்பன், உதுமான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com