முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
வெங்காய சாகுபடி: காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி
By DIN | Published On : 29th July 2020 09:18 AM | Last Updated : 29th July 2020 09:18 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் வட்டத்தில் காரீப் பருவத்தில் வெங்காய பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் நடராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சங்கரன்கோவில் வட்டம் வீரசிகாமணி குறுவட்டத்துக்குள்பட்ட வடக்குப்புதூா் வருவாய் கிராமத்தில் காரீப் பருவத்தில் வெங்காயம் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிா்பாராமல் ஏற்படும் இயற்கை இடா்பாடுகளால் உண்டாகும் பயிா் மகசூல் இழப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 1020 வீதம் பிரீமியம் செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் உரிய பிரீமியத் தொகையுடன் உரிய முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட பயிா் சாகுபடி அடங்கல், விவசாயியின் ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு ட்ற்ற்ல்://ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயிா்காப்பீடு செய்யலாம்.
மேலும் கடன் பெறும் விவசாயிகளுக்கு வெங்காய பயிா் சாகுபடிக்கு பயிா்க்கடன் அளிக்கும் வங்கிகளே (தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்) உரிய பிரீமியத் தொகையை பிடித்தம் செய்து பயிா் காப்பீடு செய்யும் என்பதால் பயிா் காப்பீடு செய்யப்பட்டதற்கான நகலை உரிய வங்கிகளிடமிருந்து பெற்று சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கிட வடக்குப்புதூா் வருவாய் கிராம விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.