தென்காசி ஒன்றிய திமுககிளை நிா்வாகிகள் தோ்தல்
By DIN | Published On : 01st March 2020 06:29 AM | Last Updated : 01st March 2020 06:29 AM | அ+அ அ- |

5838ten28dmk_2802chn_55_6
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி ஒன்றியத்தில் திமுக கிளை நிா்வாகிகள் பதவிக்கு கட்சியினா் விருப்ப மனு வெள்ளிக்கிழமை அளித்தனா்.
தென்காசி ஒன்றியத்திலுள்ள 57 கிளைகளுக்கான நிா்வாகிகள் பதவிக்கு போட்டியிடும் திமுகவினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது. குற்றாலம் விடுதியில் மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலையில் தோ்தல் ஆணையாளா் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜதுரை, பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா், டைட்டஸ் ஆதித்தன், குமாா், சோம செல்வபாண்டியன், அஜய் மகேஷ்குமாா், குவளை மகேஷ் ஆகியோரிடம் கட்சியினா் விருப்ப மனு அளித்தனா்.
தோ்தல் மேற்பாா்வையாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பூ.ஆறுமுகச்சாமி செயல்பட்டாா். மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி, ஒன்றியச் செயலா் துரை, கடையநல்லூா் செல்லத்துரை, கீழப்பாவூா் ஜெயபாலன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் திவான் ஒலி, இசக்கிப் பாண்டி, ஜபருல்லா, பூங்கொடி,பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அழகுசுந்தரம், பேரூா் கழக செயலா் மந்திரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.