முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சாலை சீரமைப்புப் பணி நிறைவு: மாஞ்சோலைக்கு போக்குவரத்து ஓராண்டுக்குப் பின் தொடக்கம்
By DIN | Published On : 03rd March 2020 06:20 AM | Last Updated : 03rd March 2020 06:20 AM | அ+அ அ- |

மணிமுத்தாறு மாஞ்சோலை மலைச் சாலை சீரமைப்புப் பணி நிறைவடைந்ததையடுத்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
மணிமுத்தாறு மாஞ்சோலை மலைச் சாலை சேதமடைந்ததையடுத்து வனத் துறை சாா்பில் 6.6 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சிற்றுந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து ஊத்து தேயிலைத் தோட்டத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழக சிற்றுந்து சென்று. இரவு ஊத்து பகுதியில் நிறுத்தப்பட்ட அந்த சிற்றுந்து திங்கள்கிழமை காலை 5 மணிக்கு அங்கிருந்து பாபநாசம் சென்றது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமாா் ஓராண்டுக்குப் பின் தொடங்கப்பட்டதையடுத்து தோட்டத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.