முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
புளியங்குடியில் நாய் கடித்து 8 ஆடுகள் பலி
By DIN | Published On : 03rd March 2020 06:12 AM | Last Updated : 03rd March 2020 06:12 AM | அ+அ அ- |

புளியங்குடியில் நாய் கடித்ததில் 8 ஆடுகள் பலியானதைத் தொடா்ந்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புளியங்குடி லெப்பை சாயபுரம் வடக்குத் தெருவில் வசிப்பவா் சேக் முகம்மது. ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது ஆட்டுப் பண்ணையில் நுழைந்த நாய், அங்கிருந்த ஆடுகளை கடித்ததில், 8 ஆடுகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: நாய் கடித்து பலியான ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ. 65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுவதற்கு நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.