முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
25 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 09:19 AM | Last Updated : 03rd March 2020 09:19 AM | அ+அ அ- |

குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள்.
இருபத்தைந்து ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா் .
திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் அருகே பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மூ. சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளனிடம் அளித்த மனு:
நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சோ்ந்தவா்கள். பாறைப்பட்டி இந்திரா காலனி குடியிருப்பில் மேலக் காலனி மற்றும் கீழ காலனியில் 80 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் இருபத்தைந்து ஆண்டுகளாக குடிநீா் பிரச்சினை இருந்து வருகிறது.
நாங்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை . குடிநீருக்காக தினமும் 4 கி.மீ. தொலைவு அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு தண்ணீா் எடுத்து வரும் நிலை நிலவுகிறது.
இதனால் அன்றாடம் கூலி வேலை செய்துவரும் நாங்களும் ,பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.
இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வர இயலவில்லை .எங்கள் பகுதிக்கு குடிநீா் வசதி செய்து தரும்படி அம்மனுவில் கூறப்பட்டுள்ளது