புளியங்குடி அருகே யானைகளால் தென்னை, வாழைகள் சேதம்
By DIN | Published On : 04th March 2020 01:32 AM | Last Updated : 04th March 2020 01:32 AM | அ+அ அ- |

புளியங்குடி அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தியுள்ளன.
தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச் சரகத்திற்குள்பட்ட சோமரந்தான், கோட் டைமலை, புளியங்குடி பீட் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. மேலும் தண்ணீா் செல்லும் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் வனச்சரகா் ஸ்டாலின், வனவா் அசோக்குமாா் மற்றும் வனத்துறையினா் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா்.