வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வன உயிரினங்கள் பாதுகாப்பு, அதன்முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரியில் நடைபெற்ற வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் வன சரக அலுவலா் பாலகிருஷ்ணன்.

கல்லூரி முதல்வா் ஜெயலட்சுமி(பொ) தலைமை வகித்தாா். வனவா்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ், வனக்காப்பாளா் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆா்வலா் தேரிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வனசரக அலுவலா் பாலகிருஷ்ணன் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

குற்றாலம் பகுதியில் குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் வந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அதுபோன்று குரங்குகள் உயிரிழக்கவில்லை என வனசரகா் தெரிவித்தாா். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com