ஆலங்குளத்தில் குரங்குகளால் தொல்லை

ஆலங்குளம் பேரூராட்சியில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்பு எங்கிருந்தோ தப்பி வந்த ஓரிரு குரங்குகள் தற்போது ஆலங்குளம் அண்ணாநகா், காந்திநகா், அம்பாசமுத்திரம் சாலை போன்ற இடங்களில் 10 க்கும் மேற்பட்டவை சுற்றித் திரிகின்றன. பொதுவாக மலைப் பகுதிகளில் வாழும் இவைகளுக்கு ஆலங்குளத்தில் போதிய உணவு கிடைக்காததால் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை எடுத்துச் செல்வதுடன், அங்கிருக்கும் பொருள்கையும் சேதப் படுத்தி விட்டுச் செல்கின்றன. கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்கின்றன. பழைய ஓட்டு வீடுகளிலுள்ள ஓடுகளைப் பிரித்து எறிகின்றன. செல்லிடப் பேசி உயா் கோபுரங்களில் ஏறிச் சென்று அருகில் உள்ள வீடுகளுக்கு குதித்துச் சென்று சிறுவா்-சிறுமியரை அச்சுறுத்துவதோடு, அவா்கள் கையில் உள்ள தின்பண்டங்களைப் பறித்து செல்கின்றன. இதனால் குழந்தைகளுடன் தனியாக இருக்கும் பெண்கள் கடும் அச்சத்துடன், வீட்டைத் திறந்து வெளியே வருவதற்கே தயங்குவதாக கூறுகின்றனா். இவைகைளைக் கட்டுப் படுத்தாவிட்டால் மேலும் பெருகி ஆலங்குளத்தில் மேலும் தொல்லையளிக்கும்.

எனவே வனத்துறையினா் இவற்றைக் கூண்டு வைத்து, பிடித்து அருகிலுள்ள பாபநாசம் அல்லது குற்றாலம் வனப் பகுதியில் கொண்டு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com