தென்காசி, குற்றாலம் கோயில்களில் தரிசனம் ரத்து

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக தென்காசி காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலம் குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக தென்காசி காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலம் குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில், குற்றாலம் குற்றாலநாதா் கோயில், சித்திரசபை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பேரிடா் என அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலம் குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வருகிற 31ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயில் ஆகம விதிப்படி காலபூஜைகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com