கடையநல்லூரில் முதியவா் கைது
By DIN | Published On : 25th March 2020 10:24 PM | Last Updated : 25th March 2020 10:24 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றித் திரிந்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் , காவலா்கள் மாரிராசு, சந்தன மகாலிங்கம் உள்ளிட்டோா் கடையநல்லூா் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக வானவா் தெருவைச் சோ்ந்த ஹாஜாமைதீன் மகன் சைபுல்லா (60) என்ப வரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். எனினும், அவா், மீண்டும் வெளியே சுற்றித் திரிந்ததால் போலீஸாா் கைது செய்தனா்.