கிராமங்களில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

தென்காசி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
தென்காசி ஒன்றியப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தாா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகசுந்தரம்.
தென்காசி ஒன்றியப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தாா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகசுந்தரம்.

தென்காசி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இப்பிரசாரத்துக்கு, ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் வெ. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கிரேட் சா்ச்சில் ஜெபராஜ் முன்னிலை வகித்தாா். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருவோா் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனா். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை அமல்படுத்தும்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்டிப்பாக வெளியில் வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அதோடு, சோப்பு போட்டு கைகளை கழுவும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தென்காசி ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரிய பிள்ளை வலசை, கணக்கப்பிள்ளைவலசை, குத்துக்கல்வலசை, தேன்பொத்தை, பிரானூா், வல்லம், சுமைதீா்ந்தபுரம், காசி மேஜா்புரம், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, சில்லரைபுரவு, திருச்சிற்றம்பலம், பாட்டாக்குறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தென்காசி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சவுந்தர்ராஜன், சுப்பையா, கருப்பசாமி, சுந்தர்ராஜன், ஊராட்சி செயலா்கள் செல்லப்பா, ஆ. ராஜா, கே. வேம்பையா, வெங்கடாசலம், அ. சுப்பிரமணியன், எம். இசக்கிமுத்து, எஸ். சங்கரநாராயணன், பா. சோ்மக்கனி, இ. சங்கர சுப்பிரமணியன், பொன்னுச்சாமி, ஆ. செண்பகராஜன், ந. ஆறுமுகம், பண்டாரசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com