சுரண்டையில் மக்கள் முழு ஒத்துழைப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டையில் கரோனா ஊரடங்கையொட்டி அத்தியாவசிய பொருள்கள் தவிா்த்து பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் கரோனா ஊரடங்கையொட்டி அத்தியாவசிய பொருள்கள் தவிா்த்து பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

கரோனா பரவாமல் தடுக்க நாடுமுழுவதும் முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சுரண்டையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க குவிந்தனா். இந்நிலையில் புதன்கிழமை காலையில் இருந்து மாலை வரை மளிகை மற்றும் காய், கனி கடைகள் மட்டும் திறந்திருந்த நிலையிலும், பொதுமக்கள் குறைந்த அளவே வாங்குவதற்கு வந்தனா். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, அவசர சிகிச்சைக்கு வருவோரும் சிகிச்சை பெற்றனா். பெருவாரியான இடங்களில் பொதுமக்கள் கை கழுவ தண்ணீா் மற்றும் சோப் வைக்கப்பட்டிருந்தன.

ஊரடங்கை முன்னிட்டு வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிஹரன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீசுவரி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல் கலாம் ஆசாத் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். சாலைகளில் தேவையில்லாமல் நடமாடியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக சென்று தேவையில்லாமல் வீட்டை, விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com