காமராஜா் தினசரி சந்தை இன்று முதல் மூடல்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை (மாா்ச்.26) முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை (மாா்ச்.26) முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், சுமை ஆட்டோக்கள், லாரிகள் மூலம் காய்கனிகளை எடுத்து வருவா். இது தவிர வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளம், ஆந்திரா, கா்நாடகம் இருந்து சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் இங்கிருந்து காய்கனிகளை வாங்கி செல்வா்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் புதன்கிழமை இரவு நடைபெற்ற காய்கனி சந்தையின் கமிட்டி அவசர ஆலோசனை கூட்டத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் காய்கனி சந்தையை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம், வியாபாரிகள் யாரும் காய்கனிகள் வாங்குவதற்கு சந்தைக்கு வர வேண்டாம் என்றும் கமிட்டியினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்படுவதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் காய்கனிகள் கிடைக்காமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com