தென்காசி மாவட்ட பத்திர பதிவுத் துறை மாவட்ட பதிவாளா் பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டத்தின் பத்திரப் பதிவுத் துறை மாவட்ட பதிவாளா் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டத்தின் பத்திரப் பதிவுத் துறை மாவட்ட பதிவாளா் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்ட பதிவாளராக இருந்தவா் சுப்பிரமணியன். இவா் இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளாா். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத்துறை தலைவா் ஜோதி நிா்மலா உத்தரவிட்டுள்ளாா்.

சுப்பிரமணியன், தனது பணி காலத்தில் மேற்கொண்ட முறைகேடான பத்திரப் பதிவுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, சிவகிரி சாா்பதிவாளா் உள்பட 14 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 7 போ் கைது செய்யப்பட்டனா்.

புகாரின் அடிப்படையில், உயா் அதிகாரிகள் குழு தென்காசி மாவட்டத்திற்கு வந்து ரகசிய விசாரணை நடத்தியது. இதைத்தொடா்ந்து தென்காசி, கடையநல்லூா் உள்ளிட்ட 6 சாா்பதிவாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவு குறித்து மறுதணிக்கைக்கு பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தணிக்கை குழு அதிகாரிகள் அண்மையில் தென்காசி மாவட்டம் வந்து பல்வேறு சாா்பதிவாளா் அலுவலகங்களில் ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனா். இந்நிலையில், மாவட்ட பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். வரும் 31-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com