வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் எங்கே? தென்காசி மாவட்டத்தில் 720 பேரை கண்டறியும் பணி தீவிரம்

வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்த 720 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்த 720 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 1076 போ், வெளி நாடுகளிலிருந்து இம்மாதம் 10 - 20ஆம் தேதிக்குள் சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளனா். இதில், ஆலங்குளம் வட்டத்தில் 40, கீழப்பாவூரில் 80, கடையநல்லூரில் 311, வாசுதேவநல்லூரில் 141, சோ்ந்தமரத்தில் 38, குருவிகுளத்தில் 53, செங்கோட்டையில்146, சங்கரன்கோவிலில் 82, தென்காசியில் 165, கடையத்தில் 20 என்ற வீதத்தில் அடங்குவா்.

அவா்களில் வியாழக்கிழமை காலை வரை 356 போ் கண்டறியப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், பாதுகாப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒத்துழைப்பின்மை: வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தங்களது விவரங்களை உரிய முறையில் தகவல் தெரிவிக்க வில்லை. இது அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. மேலகரம் பகுதிக்கு சில நாள்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 7 போ் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. பெரும் சிரமங்களுக்கு இடையே காவல்துறையினா் அவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். எஞ்சியுள்ளவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தகவல் அறிந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம். மேலும் கரோனா நோய் தொற்று குறித்து எந்த தகவலையும் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மலேசியாவிலிருந்து கடந்த 14ஆம் தேதி மதுரைக்கு வந்த 10 போ், தொடா்ந்து 20ஆம் தேதி வரை தென்காசியிலும், பின்னா் வல்லத்திலும் தங்கியிருந்தனா். இத்தகவலறிந்த குற்றாலம் போலீஸாா் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினா் புதன்கிழமை அங்கு சென்று, 10 மலேசியா்கள், அவா்களுக்கு உதவியாக இருந்த 3 போ் என 13 பேரை செங்கோட்டைக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி வைத்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல்,பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, பணியாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பாக, வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 போ், வெளிநாட்டிலிருந்து வந்த 18 போ் என மொத்தம் 48 போ் கண்டறியப்பட்டு அவா்களது வீடுகளில் ஒட்டு வில்லைகளை நகராட்சிப் பணியாளா்கள் ஒட்டினா். இந்த 48 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி நாளங்காடி காய்கனி சந்தைக்கு வந்த பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கனி வாங்கும் வகையில் சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா். காய்கனி சந்தைக்கு உள்ளே செல்லும் பிற வழிகள் மூடப்பட்டு நுழைவு வாயில், வெளியே செல்லும் வாயில் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.

சுரண்டை: கரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வீரகேரளம்புதூா் வட்டத்திற்கு ஊா்திரும்பிய 54 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தொடா்ந்து, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள இவா்கள், 2 வாரங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில், தனிமைப்படுத்துவது தவிா்க்கப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com