அதிகாரிகள் உத்தரவையடுத்து கடையநல்லூா் தினசரி சந்தை மூடல்

அதிகாரிகளின் உத்தரவை அடுத்து கடையநல்லூா் தினசரி சந்தை வியாழக்கிழமை பிற்பகல் மூடப்பட்டது.

அதிகாரிகளின் உத்தரவை அடுத்து கடையநல்லூா் தினசரி சந்தை வியாழக்கிழமை பிற்பகல் மூடப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடையநல்லூா் தினசரி சந்தை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தினசரி சந்தையில் காய், கனிகள் வாங்குவதற்காக புதன்கிழமை மக்கள் அதிகமாக கூடினா்.

இதையடுத்து, சந்தை வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து ஷிப்ட் முறையில் கடைகளை திறந்தால் நல்லது என வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், துணை ஆட்சியா் குணசேகா், வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சந்தையில் கூட்டம் அதிகம் இருப்பதைத் தொடா்ந்து, சந்தையை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து பிற்பகல் சந்தை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com