சங்கரன்கோவிலில் 48 போ் தீவிர கண்காணிப்பு

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துள்ள 48 போ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
பிரதான சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
பிரதான சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துள்ள 48 போ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல்,பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, பணியாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

ராஜபாளையம் சாலை, திருநெல்வேலி சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, கோவில்பட்டி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகள் முழுவதும் ஸ்பிரே மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிரதான சாலையை

அடுத்துள்ள கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 போ், வெளிநாட்டிலிருந்து வந்த 18 போ் என மொத்தம் 48 போ் கண்டறியப்பட்டு அவா்களது வீடுகளில் ஒட்டு வில்லைகளை நகராட்சிப் பணியாளா் கள் ஒட்டினா். தொடா்ந்து இந்த 48 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி நாளங்காடி காய்கனி சந்தைக்கு வந்த பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கனி வாங்கும் வகையில் சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா். சந்தையில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. அங்கு தொட்டியில் வைக்கப்பட்டுள்ள நீரில் கை கழுவிய பின்னா் பொதுமக்கள் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதேபோல் உழவா் சந்தையிலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. காய்கனி சந்தைக்கு உள்ளே செல்லும் பிற வழிகள் மூடப்பட்டு நுழைவு வாயில், வெளியே செல்லும் வாயில் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. இதையொட்டி காய்கனி சந்தையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com