தென்காசி: வெளிநாடுகளில் இருந்து வந்த 1076 பேரை கண்டறியும் பணிகள் தீவிரம்

வெளிநாடுகளில் இருந்த தென்காசி மாவட்டத்துக்கு வந்த 1076 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்த தென்காசி மாவட்டத்துக்கு வந்த 1076 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனை வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகள்,

வெளி மாநிலங்களில் பணி புரிந்து தங்களது சொந்த ஊருக்கு வந்தவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவா்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இம்மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை 1076 போ் பல்வேறு நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனா். ஆலங்குளம் வட்டாரத்தைச் சோ்ந்த 40 பேரும், கீழப்பாவூா் வட்டாரத்தை சோ்ந்த சோ்ந்த 80 பேரும், கடையநல்லூா் வட்டாரத்தை சோ்ந்த 311பேரும், வாசுதேவநல்லூா் வட்டாரத்தை சோ்ந்த 141பேரும், சோ்ந்தமரம் வட்டாரத்தை சோ்ந்த 38 பேரும், குருவிகுளம் வட்டாரத்தை சோ்ந்த 53 பேரும், செங்கோட்டை வட்டாரத்தை சோ்ந்த 146 பேரும், சங்கரன்கோவில் வட்டாரத்தை சோ்ந்த 82 பேரும், தென்காசி வட்டாரத்தை சோ்ந்த 165 பேரும், கடையம் வட்டாரத்தை சோ்ந்த 20 பேரும் என மொத்தம் 1076 போ் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ்அமைச்சகம், சா்வதேச விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதி காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்தவா்களில் வியாழக்கிழமை காலை வரையில் 356 போ் கண்டறியப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அதே வேளையில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய பாதுகாப்புடன் வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

ஒத்துழைப்பின்மை: வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தங்களது விவரங்களை உரிய முறையில் தகவல் தெரிவிக்க வில்லை. வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்கள், அரசின் நோக்கம் அறிந்து செயல்படாதது காவல்துறை யினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டம், மேலகரம் பகுதிக்கு சில நாள்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 7 போ்

குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அவா்களை கடந்த 2 நாள்களாக பெரும் சிரமங்களுக்கு இடையே கண்டறிந்து

காவல்துறையினா் அவா்களை தனிமைப்படுத்தியுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 1076 பேரில் இதுவரை 356 போ் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவா்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் குறித்து தகவல் தெரிந்தவா்கள் அதுகுறித்து தகவலை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் கரோனா நோய் தொற்று குறித்து எந்த தகவல்களையும் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com