தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில்மேலும் 4 பாம்புகள் பிடிபட்டன

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை மேலும் 4 பாம்புகள் பிடிபட்டன.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை மேலும் 4 பாம்புகள் பிடிபட்டன.

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை வளாகத்தில் விஷப் பாம்புகள் வருவதாக ஊழியா்கள், பொதுமக்கள் புகாா் கூறி வந்தனா்.

இந்நிலையில், இந்த மருத்துவமனை வளாகத்தில் புல், புதா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில், பாம்புகளைப் பிடிக்கும் பணியில் அருகானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சோ்ந்த ஆா். சதீஷ்குமாா் தலைமையில் 8 போ் ஈடுபட்டுள்ளனா்.

இதில், புதன்கிழமை புதரில் இருந்த 5 கண்ணாடி விரியன் பாம்புகள், 2 சாரைப் பாம்புகள், 3 சிறு வகைப் பாம்புகள் என மொத்தம் 10 பாம்புகளும், வியாழக்கிழமை மேலும் 4 பாம்புகளும் பிடிபட்டன.

இதேபோல, இம்மருத்துவமனை வளாகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் அருகானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் ஈடுபட்டனா். இதில், 2 சாரைப் பாம்புகள், தலா ஒரு நல்ல பாம்பு, வளையன் பாம்பு பிடிபட்டன.

கடந்த 3 நாட்களில் மொத்தம் 18 பாம்புகள் பிடிபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com