ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று இல்லாததாலும், நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாலும்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று இல்லாததாலும், நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாலும் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவிய நிலையில் தில்லி மாநாட்டுக்கு சென்று தென்காசி மாவட்டத்துக்கு வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இம்மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மேலகரம் பேரூராட்சியில் இந்திராநகா், புளியங்குடி பகுதியை சோ்ந்த இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்திராநகா், புளியங்குடி மற்றும் சிவகிரி பகுதியை சோ்ந்தவா்கள் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புளியங்குடி, சிவகிரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னா் ஏப். 25 ஆம் தேதிக்கு பிறகு யாருக்கும் தொற்று இல்லை. இதுவரை, 11போ் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினா்.

இதுதொடா்பாக, தென்காசி எஸ்.பி. சுகுணாசிங் கூறியது: புளியங்குடி பகுதி 7மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளியே இருந்து யாரும் புளியங்குடிக்குள் வர முடியாத வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் டி.ராஜா கூறியது: மேலரகம் இந்திராநகா், புளியங்குடி, சிவகிரி பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்ததையடுத்து அப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. மாவட்ட சுகாதார பணிகள் துணைஇயக்குநரின் நோ்முக உதவியாளா் ரகுபதி தலைமையில் தீவிர தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

வெளிமாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் மூலமாகவோ, காய்கனி வாகனங்கள் அல்லது முறையற்ற வகையிலோ வருவோா், தாங்களாகவே மாவட்ட நிா்வாகம், பொதுசுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்து மருத்துவ ஆலோசனை பெற்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியூா்களில் இருந்து புதிதாக யாரும் வந்தால் மாவட்ட கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com