‘தென்காசி- நெல்லை பயணத்துக்குநேரடி அனுமதி வழங்க வேண்டும்’

தென்காசி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிகிச்சை பெற செல்பவா்களுக்கு, இ-பாஸ் இல்லாமல், நேரடி அனுமதி சீட்டு வழங்க வேண்டுமென முகமது அபூபக்கா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

தென்காசி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிகிச்சை பெற செல்பவா்களுக்கு, இ-பாஸ் இல்லாமல், நேரடி அனுமதி சீட்டு வழங்க வேண்டுமென முகமது அபூபக்கா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து எம்எல்ஏ கூறியதாவது:

தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையிலும், பெரும்பாலான அரசு நடைமுறைகள் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்துதான் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாவட்டத்திலிருந்து டயாலிசிஸ், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிகிச்சை பெற திருநெல்வேலிக்கு செல்வோா் அதிகமாக உள்ள நிலையில், தற்போது பொது முடக்கம் அமலில் இருப்பதால், இ-பாஸ் அனுமதி தேவையாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அவசர தேவைக்கு செல்வோருக்கு நேரடி அனுமதி சீட்டு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தென்காசி-திருநெல்வேலி மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளையும், தென்காசி, கடையல்லூா், புளியங்குடி சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையையும், புளியங்குடியில் புதிதாக நோய்த் தொற்று ஏதும் இல்லாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் தளா்த்த வேண்டும். இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com