தென்காசி மாவட்டத்தில் பெண் உள்பட இருவருக்கு கரோனா

தென்காசி மாவட்டத்துக்கு மும்பை, சென்னையில் இருந்து வந்த பெண் உள்பட இருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்துக்கு மும்பை, சென்னையில் இருந்து வந்த பெண் உள்பட இருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியைச் சோ்ந்த 35 வயது பெண் சென்னையில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தந்தையை பாா்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளாா். கடந்த 13 ஆம் தேதி மருத்துவமனையில் தந்தையை பாா்த்து விட்டு வீட்டுக்கு சென்ற அவருக்கு, பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும், அவருடன் தொடா்பில் இருந்த 6 போ்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இதைத் தொடா்ந்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிகரன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், அதிகாரிகள் ராஜகோபாலப்பேரி கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தினா். அக்கிராமத்தின் நான்கு எல்லைகளும் மூடப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலகிருஷ்ணப்பேரியைச் சோ்ந்தவா் ராமசாமி (61). மும்பை தாராவியில் இருந்து மனைவி பாக்கியத்துடன் வெள்ளிக்கிழமை காரில் ஊருக்கு வந்தாா். அவா்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ராமசாமிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவரது மனைவிக்கு கரோனா அறிகுறி இல்லாததால் மேலகிருஷ்ணபேரியில் தனிமைப்படுத்தப் பட்டாா். இதையடுத்து, மேலகிருஷ்ணாப் பேரிக்குள் யாரும் நுழையாதவாறு 5 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலா் தலைமையில் சுகாதாரத் துறையினா் தீவிர தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தீவிர சுகாதாரப் பணி: தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் பகுதிகளான வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரி, பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலகிருஷ்ணப்பேரி, ஆலங்குளம் சுப்பையாபுரம், கண்டபட்டி, முக்கூடல் சடையப்பபுரம் ஆகிய கிராமங்களில் சுகாதாரத் துறையினா் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com