புளியங்குடியில் ஏடிஎம் மையங்கள் செயல்பட அனுமதி

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் செயல்படலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் செயல்படலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

புளியங்குடி பகுதியில் கரோனா நோய்த் தொற்றால் பலா் பாதிக்கப்பட்டதை அடுத்து புளியங்குடி நகரம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து தெருக்களும் மூடப்பட்டன. நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வந்த அனைத்து வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டன. காவல்துறை ஏற்பாட்டில் நடமாடும் ஏடிஎம் மையங்கள் மூலம் மக்களுக்கு சேவை வழங்கப்பட்டது.

இருப்பினும், வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களை திறக்க வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ், ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தாா். இதனிடையே, புளியங்குடியில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் செயல்படலாம் என ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் அறிவுறுத்தியுள்ளதாக வட்டாட்சியா் அழகப்பராஜா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com