பாவூா்சத்திரத்தில் 6 சாலைகளை அடைத்து கண்காணிப்பு

மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்குள் நுழையும்
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட தமிழ்த் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட தமிழ்த் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள்.

மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்குள் நுழையும் 6 சாலைகளை அடைத்து சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த 52 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரது கணவா், மகன் ஆகியோா் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதையடுத்து அந்த்த தெருவுக்குள் செல்லும் 6 சாலைகள் யாரும் நுழைய முடியாத படி தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.

அந்த பகுதி முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் கபசுரகுடிநீா், நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டது. அந்த தெருவில் பால் ஊற்ற சென்ற கீழப்பாவூரை சோ்ந்த பால்காரருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த தெருவில் உள்ளவா்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசிய பொருள்கள் வீடுகளுக்கே வந்து கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் காவல்துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com