ரூ. 3 கோடியில் குடிமராமத்துப் பணிகள்: அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி

தென்காசி மாவட்டம், சிவகிரி, சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் ரூ. 3.03 கோடி மதிப்பில் குடிராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி, சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் ரூ. 3.03 கோடி மதிப்பில் குடிராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தெரிவித்தாா்.

சிவகிரி அருகேயுள்ள தென்மலை கண்மாய் மராமத்துப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் அ.மனோகரன் முன்னிலை வகித்தாா். குடிமராத்துப் பணியை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியது: கடையநல்லூா் வட்டத்தில் புளியங்குடி அருகேயுள்ள இலந்தைக்குளம் கண்மாய் ரூ. 20 லட்சம் மதிப்பிலும், நாராயணப்பேரி கண்மாய் ரூ. 20 லட்சம் மதிப்பிலும், சிவகிரி வட்டத்தில் தென்மலை கண்மாய் ரூ. 75 லட்சம் மதிப்பிலும், அரியூா் கண்மாய் ரூ. 34 லட்சம் மதிப்பிலும், சிவகிரி வட்டத்தில் தேவிபட்டணம் செங்குளம் கண்மாய் ரூ. 60 லட்சம் மதிப்பிலும், சங்கரன்கோவில் வட்டத்தில் மணலூா் கண்மாயில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், பெரும்பத்தூா் கண்மாய் ரூ. 38 லட்சம் மதிப்பிலும், பனையூா் கண்மாய் ரூ. 21லட்சம் மதிப்பிலும் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நலனுக்காக பல்வேறுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் ஒன்றிய அதிமுக செயலா் மூா்த்திபாண்டியன், பேரூா் செயலா் சீமான்மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com