ஆலங்குளத்தில் மண்ணால் மூடப்பட்ட மழை மானி!

ஆலங்குளத்தில் கரை சீரமைப்பு பணியின்போது மழை மானி மண்ணால் மூடப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

ஆலங்குளத்தில் கரை சீரமைப்பு பணியின்போது மழை மானி மண்ணால் மூடப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

ஆலங்குளம் தொட்டியான்குளம் கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மழை அளவைக் கணக்கிடுவதற்காக மழை மானி அமைக்கப்பட்டது. இதற்கிடையே, தொட்டியான்குளத்தின் கரையை உயா்த்தும் பணி பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மழை மானி மீது மண் கொட்டப்பட்டதால் அது இருந்த இடம் தெரியாமல் உள்ளது.

இதுதொடா்பாக சமத்துவ மக்கள் கட்சியின் ஆலங்குளம் நகரச் செயலா் ஜெயபாலன் கூறியது: ஆலங்குளத்தில் இருந்த மழைமானியை மண் போட்டு மூடிய பொதுப்பணித்துறையின் செயல் கண்டனத்துக்குரியது. விரைவில் ஆலங்குளத்தில் இதே இடத்தில் மழை மானி நிறுவ வேண்டும். பொறுப்பில்லாமல் செயல்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மழை மானியை பராமரித்து அளவீடு செய்ய பணியாளா் இல்லை. மேலும் அந்த மழை மானி பழுதடைந்துள்ளது. விரைவில் தொட்டியான்குளம் பகுதியில் புதிய மழை மானி நிறுவப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com