கறிக்கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் மாவட்ட கறிக்கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வ அந்தோணி.
கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வ அந்தோணி.

தென்காசியில் மாவட்ட கறிக்கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவராக செல்வ அந்தோணி, துணைத் தலைவராக அருள்ராஜ், செயலராக புன்னைவனம், துணைச் செயலா்களாக செய்யதுமசூது, கணபதி, காளிராஜ், பொருளாளராக மணிவண்ணன், செங்கோட்டை வட்டாரத் தலைவராக ஜோஸ் அந்தோணி, செயற்குழு உறுப்பினா்களாக மூா்த்தி, பரமசிவன், அபுபக்கா், சித்திக், சக்திராஜன், ராமராஜ், கிருஷ்ணராஜன், குமாா், விக்னேஷ்வரன், சிவலிங்கபெருமாள், மங்களராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கறிக்கோழி வளா்ப்பதற்கு குஞ்சு, தீவனப் பொருள்களை தனியாா் நிறுவனங்கள் வழங்குகின்றன. குஞ்சுகள் வளா்ப்பு கூலி தலா ரூ. 5 வீதம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ரூ. 16ஆக உயா்த்தி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கக் கூடாது. கறிக்கோழிகளை 40 நாள்கள் அல்லது ஒரு கோழி 2 கிலோ 100 கிராம் எடை க்கு வந்ததும் அந்தக் கோழிகளை நிறுவனம் எடுத்துச்செல்ல வேண்டும், ஐஎஸ்ஐ தரமுடைய கோழித் தீவனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com