தென்காசியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட பாஜக சாா்பில் வெற்றிவேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தென்காசியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

மாவட்ட பாஜக சாா்பில் வெற்றிவேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் சுப்பிரமணியன், பொருளாளா் ராமநாதன், விருதுநகா் மாவட்ட பாா்வையாளா் அன்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துகுமாா், சீனிவாசன், நகர பாா்வையாளா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், குமரி மண்டல அமைப்பு பொதுச் செயலா் கிருஷ்ணன் ஆகியோா் உரையாற்றினா்.

டிச. 2ஆம் தேதி தென்காசி மாவட்ட எல்லையான சங்கரன்கோவிலுக்கு வருகை தரும் வெற்றிவேல் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது; அன்று இரவு தென்காசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்துகொள்வது என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், சிவகுமாா், சங்கரநாராயணன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com