ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும்: நயினாா் நாகேந்திரன்

நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் என கட்சியின் மாநில துணைத் தலைவரும், குமரி மண்டல பொறுப்பாளருமான நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் என கட்சியின் மாநில துணைத் தலைவரும், குமரி மண்டல பொறுப்பாளருமான நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய கூட்டணியே தொடா்ந்து நீடிக்கும். அரசியல் யாத்திரையோ அல்லது எந்தவிதமான யாத்திரையாக இருந்தாலும் அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசுக்கு உரிமை உண்டு. நாங்கள் அனுமதி கேட்டுள்ளோம், அரசு வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு மத்திய அமைச்சா் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டத்துக்கு எந்த அமைச்சா் வருகிறாா் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

யாத்திரை நிறைவு பெறும் திருச்செந்தூரில் டிச. 6ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா கலந்துகொள்கிறாா். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும். அரசியல் கட்சித் தலைவா்கள் சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது நல்லது என்றாா் அவா்.

அப்போது, மாவட்டத் தலைவா் ராமராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com