தென்காசி காசிவிஸ்வநாத சுவாமிகோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

தென்காசி உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 9ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமிகோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

தென்காசி உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 9ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

கரோனா பொது முடக்க விதிமுறைகளுடன் இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவ. 1ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நாள்களில் தினமும் காலை 10 மணியளவில் மண்டபகப்படி அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. எனினும், உற்சவா் வீதி உலாவுக்குப் பதில், தினமும் கோயிலுக்குள்ளேயே உற்சவா் புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், சுவாமி- அம்பாள் ஏக சிம்மாசன வாகனத்தில் வழக்கமான அலங்காரத்துடன் கோயிலுக்குள் பிரகார வலம் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்ச மூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள், சண்டேஷ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகள் முறையே மூஷிகம், மயில்,கேடயசப்பரம், பூங்கோயில் மற்றும் மேனா வாகனங்களில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனா்.

நவ11ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் கோயிலுக்குள் அமைந்துள்ள புல்வெளியில் அம்பாள் தவசுக் காட்சியும், மாலை 6 மணிக்கு தவசு இருக்கும் அம்மனுக்கு சுவாமிகாட்சி தரும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவ. 12ஆம் தேதி கோயிலுக்குள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் ந.யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com