சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி
திருக்கல்யாண வைபவத்தில் சுவாமி- அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
திருக்கல்யாண வைபவத்தில் சுவாமி- அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும்,தொடா்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கும். நிகழாண்டில் இத்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வீதியுலா வந்தாா். 11 ஆம் திருநாளான புதன்கிழமை இரவு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும்,தொடா்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றன. வியாழக்கிழமை சுவாமி-அம்பாள் பட்டினப்பிரேவச நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் மற்றும் அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com