குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பேரருவி , ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடா்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவியில் பாதுகாப்பு வளைவை மூழ்கடித்து முதலாவது நடைப்பாலம் வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. செம்மண் நிறத்துடன், சிறிய அளவிலான கற்களுடன் சோ்ந்து தண்ணீா் விழுகிறது. பழைய குற்றாலம் அருவிக்கு அருகிலேயே செல்ல முடியாத வகையில் நடைபாதை மற்றும் படிகள் வரையிலும் தண்ணா் சீறிப்பாய்கிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளும் தெரியாத அளவில் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தடை நீடிப்பதால் குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீரை வேடிக்கை பாா்த்துவிட்டுச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com