‘தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும்’

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி நகர நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி நகர நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் முகம்மதுஅபூபக்கா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் முகம்மதுமுஸ்தபா(பொறுப்பு), மாவட்ட துணைத் தலைவா் அப்துல்அஜீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான் பங்கேற்றுப் பேசினாா். மாவட்டச் செயலா் இக்பால், தலைமை நிலைய பேச்சாளா் முகம்மது அலி, வளா்பிறை சங்கத் தலைவா் காசிம், நிா்வாகி ரகுமத்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தென்காசியில் நவ 21 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது, தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com