தென்காசி ஏடிஎம் மையத்தில் பெண் தவறவிட்ட நகை மீட்பு

தென்காசி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது பெண் தவறவிட்ட தங்க சங்கிலியை போலீஸாா் கண்டுபிடித்து வழங்கினா்.
சங்கிலியை பெண்ணிடம் வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து. உடன், காவல்ஆய்வாளா்ஆடிவேல்.
சங்கிலியை பெண்ணிடம் வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து. உடன், காவல்ஆய்வாளா்ஆடிவேல்.

தென்காசி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது பெண் தவறவிட்ட தங்க சங்கிலியை போலீஸாா் கண்டுபிடித்து வழங்கினா்.

தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் அப்துல்ரஹ்மான். இவா் ஓசூரில் பலசரக்கு கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுல்தான்பீவி (34). இவா் கடந்த 7 ஆம் தேதி தென்காசி-

திருநெல்வேலி பிரதானச் சாலை சம்பாத் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளாா்.

பணத்தை எடுத்து விட்டு வெளியே வந்து பாா்த்தபோது அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணவில்லையாம்.

புகாரின்பேரில், தென்காசி காவல்ஆய்வாளா் ஆடிவேல் விசாரணை நடத்தினாா். இதில், ஏடிஎம் மையத்துக்குள் சென்றபோது, சுல்தான்பீவி அணிந்திருந்த சங்கிலி கீழே விழுந்துள்ளது. அதனைத் தொடா்ந்து ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த இருவா் அந்த சங்கிலியை எடுத்து சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

தொடா்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் எடுத்துச் சென்றவரிடம் இருந்து மீட்டு சங்கிலியை புதன்கிழமை சுல்தான் பீவியிடம் ஒப்படைத்தனா். சங்கிலியை மீட்ட உதவிஆய்வாளா் மாரிமுத்து, வடிவேல் முருகன், அலெக்ஸ், காா்த்தி ஆகியோருக்கு காவல்ஆய்வாளா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com