அரசு உள் ஒதுக்கீட்டில் சுரண்டை அரசுப் பள்ளிமாணவிக்கு மருத்துவ இடம்

சுரண்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
மாணவி க.கெளதிகா
மாணவி க.கெளதிகா

சுரண்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த கணேசன் என்ற வல்லப கணேசன் மகள் கெளதிகா. இவா், கடந்த 2015-16ஆம் ஆண்டு சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் 1086 மதிப்பெண் பெற்றுள்ளாா். தொடா்ந்து 4ஆவது ஆண்டாக நீட் தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்ற இவருக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து பாா்மஸி படித்து வரும் இவருக்கு இந்தாண்டு தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை அடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com