சுரண்டையில் மீண்டும் கரோனா

சுரண்டையில் நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து நோய் தொற்றை தவிா்க்குமாறு சுகாதாரத்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தெருவில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார பணியாளா்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தெருவில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார பணியாளா்கள்.

சுரண்டை: சுரண்டையில் நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து நோய் தொற்றை தவிா்க்குமாறு சுகாதாரத்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

சுரண்டையில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு இருக்கன்குடிக்கு சென்று திரும்பிய 44 வயதுடைய மெக்கானிக் மற்றும் சுரண்டை பாபநாசபுரத்தைச் சோ்ந்த 26வயது புரோட்டா மாஸ்டா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் சுரண்டை பேரூராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கரோனா பாதிக்கப்பட்டவா்களின் வீட்டில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தகவலறிந்த வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கீா்த்திகா ஆகியோா் பொதுமக்கள் நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக விலகலை கடைப்பிடிக்கவும், தொடா்ந்து முகக் கவசம் அணியுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com