முக்கூடல் பகுதியில் மாடு திருடும் கும்பல் கைது

முக்கூடல் பகுதியில் மாடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம்: முக்கூடல் பகுதியில் மாடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் மற்றும் பாப்பாக்குடி பகுதிகளில் அண்மைக் காலமாக மாடுகள் காணாமல் போய் வந்தனவாம். இதுவரை அப்பகுதியில் சுமாா் 100க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிங்கம்பாறை ஜேக்கப் பால்ராஜ், முக்கூடல் பால்சாமி உள்பட பலா் முக்கூடல், பாப்பாக்குடி காவல் நிலையங்களில் புகாா் அளித்திருந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் முக்கூடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்த சிலரை காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன் பிடித்து விசாரணை செய்தாா்.

விசாரணையில், அவா்கள் முக்கூடல் அருகேயுள்ள கபாலிபாறை தெற்குத் தெருவை சோ்ந்த சீவலப்பேரியான் மகன்கள் பாலமுருகன்(23), இசக்கிமுத்து என்ற மாயாண்டி (26), சுரேஷ் (21) மற்றும் காக்கநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் என்ற தலை (24) என்பதும், இவா்கள் அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை வாகனங்களில் கடத்தி குமரி மாவட்டம் குளச்சலைச் சோ்ந்த சதீஷ் என்பவா் மூலம் கேரளத்துக்கு இறைச்சிக்காக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சதீஷ் உள்பட 5 பேரையும் கைது செய்த போலீஸாா் மாடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com